பெற்றோல் தட்டுப்பாடு - சுட்டெரிக்கும் வெயிலில் மீண்டும் நீண்ட வரிசையில் மக்கள்(படங்கள்)
இன்று (3) நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் நீண்ட வரிசையில் எரிபொருளுக்காக காத்திருந்தனர்.
பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லாததால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றோல் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
சில பகுதிகளில் பெற்றோல் வரிசை மைல்களுக்கு நீண்டு காணப்பட்டது. சில பகுதிகளில், எரிபொருள் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுவதற்கு முன்பு, மக்கள் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
டீசல் தட்டுப்பாடு இல்லை எனவும், சுமார் மூன்று நாட்களாக எரிபொருள் கொண்டு செல்லப்படாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாலும், அதிகளவான மக்கள் எரிபொருள் பெற வருவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த தனியார் எரிபொருள் பௌசர்களும் நேற்று காலை முதல் வழமை போன்று எரிபொருள் போக்குவரத்தில் இணைந்து கொண்டதுடன் எரிபொருள் விநியோகம் தொடர்ந்தும் செயற்படும் என அதிகாரி தெரிவித்தார்.





