வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவது ஏன் - அமைச்சர் விடுத்த அறிவிப்பு
மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் .கடந்த ஆறு மாதங்களில் சிலர் தமிழ்நாடு, வியட்நாம் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
சுமார் 302 தமிழர்கள் வியட்நாமிற்கும் ஏழு பேர் உக்ரைனுக்கும் தப்பிச் சென்றுள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வியட்நாமில் உள்ளவர்கள் நாடு திரும்ப விருப்பம்
வியட்நாமில் உள்ளவர்களில் 85 பேர் திரும்பி வர ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அவர்கள் திரும்புவதற்கு அமைச்சகம் வசதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அகதி அந்தஸ்து கோருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், மனித கடத்தலில் சிக்காமல் இருப்பது குறித்தும் வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு அறிவூட்டுவதற்கு ஒரு விளம்பரப் பொறிமுறை தேவை என்றார்.
"அவர்கள் அகதி அந்தஸ்தில் அல்லது தவறான பாஸ்போர்ட்டில் சென்று கடத்தலில் சிக்கினால், அவர்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும்" என்று நாங்கள் அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
