செம்மணி விவகாரத்தில் அரச தலையீடு எதுவுமில்லை : வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு
செம்மணி விவகாரம் நீதிதிதுறையின் கீழ் வருகின்றதனால் இதில் அரச தலையீடு எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மன்னார், மாத்தளையிலும் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை அகழ்வதற்கான விசாரணைகள் குறித்த உரிய நடைமுறைகளிற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாகவும் இந்த விடயங்களில் நாங்கள் வெளிப்படையாக உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செம்மணி மனித புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை அவசியம் என்ற வேண்டுகோள்கள் குறித்து பதிலளித்துள்ள போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60 வது கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் குழுவிற்கு தலைமை தாங்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானங்கள் கடுமையானவையாக காணப்படாத நிலை காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதற்காக உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் அரசியல் தலையீடுகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என விஜித ஹேரத் கூறியுள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனம்
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்துவது உள்நாட்டு பொறிமுறை குறித்து சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் சுயாதீன வழக்குரைஞர் அலுவலகத்தை ஏற்படுத்துவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளோம் எனவும் எதிர்காலத்தில் இதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
