கனிய மணல் அகழ்வு என்ற பெயரில் பறிக்கப்படும் தமிழரின் பூர்விக நிலங்கள்!

Srilanka people Mullaitivu Lands plundered mineral sand mining
By MKkamshan Feb 10, 2022 02:44 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் கிராமத்தில் தமிழ் மக்களின் சுமார் 1000 ஏக்கர் பூர்வீக நிலங்கள் கனிய மணல் அகழ்வு என்ற பெயரில் அபகரிக்க நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த வாரம் கொக்கிளாய் முகத்துவாரம் தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான மக்களின் விவசாய செய்கைக்காக பயன்படுத்தும் நிலங்கள் ,தோட்ட செய்கைக்கான நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்கள் உள்ளடங்கலாக இவ்வாறு அளவீடு செய்யும் நடவடிக்கையினை நில அளவை திணைக்களத்தினர் மேற்கொண்டுள்ளதாக கொக்கிளாய் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கொக்கிளாய் கிழக்கு பகுதியில் 16 பேருக்கு சொந்தமான 44 ஏக்கர் பூர்வீக காணிகளை எந்தவித முன்னறிவித்தலோ இழப்பீடோ வழங்காது கையகப்படுத்தி இல்மனையிட் அகழ்வை ஆரம்பித்துள்ள கனிய மணல் கூட்டு தாபனம் தற்போது மேலும் காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கையாக இவ்வாறு முன்னறிவித்தல் எதுவுமின்றி தமது காணிகளை கையகப்படுத்தும் நோக்கோடு நில அளவை செய்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக கொக்கிளாய் கிழக்கு பகுதியில் சில வாரங்களுக்கு முதல் அறுவடை மேற்கொண்ட வயல் நிலங்கள் உள்ளடங்கலாக காணிக்குரிய ஆவணங்களை கூட வைத்துள்ளவர்களின் காணிகள் 60 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதி இவ்வாறு கனிய மணல் கூட்டு தாபனத்துக்காக நில அளவை செய்து எல்லைப்படுத்த பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தமது காணிகளில் நில அளவீடு இடம்பெறுவதை அறிந்து அவ்விடத்துக்கு சென்ற காணி உரிமையாளர்களுக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் இது மேலிடத்து உத்தரவு இதற்கமையவே நாங்கள் அளவீடு செய்கின்றோம் . உங்கள் காணிகளாக இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் என தெரிவித்துள்ளதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கனிய மணல் அகழ்வுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த காணி சுவீகரிப்பு கொக்கிளாய் முகத்துவாரத்திலிருந்து கரையோரமாக கடல் கரையிலிருந்து சுமார் ஐந்நூறு மீற்றருக்கும் அதிகமான பகுதி கிராமத்தின் உள்ளே நீண்டு செல்வதோடு கொக்கிளாய் ,கருநாட்டுக்கேணி , கொக்குத்தொடுவாய் , நாயாறு , செம்மலை கிழக்கு வரை சுமார் 12 கிலோ மீட்டர்களுக்கு அதிகமான கரையோரப்பகுதிகள் வரை இவ்வாறு காணிகளை எதிர்வரும் நாட்களில் அளவீடு செய்து சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே மாவலி எல் வலயம் ,சிங்கள மீனவ குடியேற்றம் ,இராணுவ காணி அபகரிப்பு வன திணைக்களம் ,வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பௌத்த விகாரை அமைப்பதற்கான காணி பறிப்பு என பல்வேறு வகையில் இந்த கிராமங்களில் காணி அபகரிப்பு இடம்பெற்ற நிலையில் தற்போது கனிய மணல் கூட்டுதாபனமும் மக்களுக்கு சொந்தமான காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதை தமது இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடு என குறித்த கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் அழைப்பின் பேரில் காணி அபகரிப்புக்காக அளவீடு இடம்பெறும் கொக்கிளாய் பகுதிக்கு இன்றைய தினம் சென்ற சட்டத்தரணி தனஞ்சயன் சட்ட நடவடிக்கைகளுக்காக மக்களுடன் கலந்துரையாடி இடத்தினையும் பார்வையிட்டார் .

இவரோடு முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சென்று பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்ததோடு அளவீடு செய்யப்பட்டுள்ள காணிகளையும் நேரில் சென்று பார்வியிட்டார்.



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024