யாழ். பாடசாலையில் உள்ள பழமையான மரத்தை வெட்ட முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு

Vaddukoddai Hindu College Jaffna Sri Lankan Peoples Temple Trees
By Thulsi Oct 08, 2024 10:54 AM GMT
Report

யாழ்ப்பாணம் (jaffna) - வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வளாகத்தில் நிற்கும் மலைவேம்பு மரத்தை வெட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கிராம சேவகர், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர், மரக் கூட்டுத்தாபனம் ஆகியன அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பாடசாலை வளாகத்தில் வீதியோரமாக மலைவேம்பு மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தில் உள்ள கொப்புக்களால் ஆபத்து என தெரிவித்து மரக் கூட்டுத்தாபனம் நேற்றையதினம் மரத்தின் கொப்புகளை வெட்டியுள்ளது.

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

மரங்களையே வெட்டாமல் அபிவிருத்தி

அத்துடன் கொப்புகளை வெட்டுவதோடு மட்டுமல்லாமல் மரத்தையே அடியோடு வெட்டுவதற்கு நாளையதினம் மரக் கூட்டுத்தாபனம் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ். பாடசாலையில் உள்ள பழமையான மரத்தை வெட்ட முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு | People Opposition To Cutting Tree In Jaffna School

இந்நிலையில் பெற்றோர் கருத்து தெரிவிக்கையில், குறித்த மரமானது பல ஆண்டு காலமாக பாடசாலை வளாகத்தில் நிற்கின்றது.

மரத்தின் கொப்புகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தால் குறித்த கொப்புகளை வெட்டலாம் ஆனால் மரத்தினை வெட்ட வேண்டிய தேவை இல்லை. பயணிகளது நன்மை கருதி வீதிகளில் உள்ள மரங்களையே வெட்டாமல் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் பாடசாலை வளாகத்திற்குள் நிற்கின்ற நேரத்தை வெட்டுவதற்கான தேவை என்ன? 

சந்தையில் நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சந்தையில் நச்சுத் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உடல் ஆரோக்கியம் கேள்விக்குறி

குறித்த மரம் நிற்கின்றதால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் மரநிழலில் நிற்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. அத்துடன் ஒட்சிசனை பெறுவதற்கும், வெப்பநிலையை சீர் செயாவதற்கும் குறித்த மரம் அளப்பரிய பங்காற்றுகின்றது.

யாழ். பாடசாலையில் உள்ள பழமையான மரத்தை வெட்ட முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு | People Opposition To Cutting Tree In Jaffna School

குறித்த மரத்தினை வெட்டுவதால், பாடசாலையில் கல்வி கற்கும் எமது பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாதிப்புகள் உள்ளன. அவர்களது உடல் ஆரோக்கியமும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.

மரங்களை நாட்டவேண்டு என்ற எண்ணக்கரு மாணவர்களிடத்திலே விதைக்கப்பட்டு வரும் நிலையில், அனைவருக்கும் நன்மை பயக்கும் இந்த மரத்தினை வெட்டுவது நியாயமா? இதனால் மரக் கூட்டுத்தாபனத்துக்கு என்ன இலாபம் இருக்கின்றது?

எனவே இந்த விடயம் தொடர்பாக அந்தப் பகுதிக்கான கிராம சேவகர், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர், மரக் கூட்டுத்தாபனம் ஆகியன அதிக கவனம் செலுத்தி , நாளையதினம் (09) இந்த மரத்தினை வெட்டும் பணியை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலதிக செய்திகள்: கஜிந்தன்

யாழ். பாடசாலையில் உள்ள பழமையான மரத்தை வெட்ட முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு | People Opposition To Cutting Tree In Jaffna School

யாழ். பாடசாலையில் உள்ள பழமையான மரத்தை வெட்ட முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு | People Opposition To Cutting Tree In Jaffna School

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026