கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

Ampara Sri Lanka Sri Lankan Peoples SL Protest Kalmunai
By Sathangani Mar 26, 2024 09:30 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும் தொடரும் நிர்வாக செயற்பாடுகளில் அத்துமீறிய தலையீடுகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

பிரதேச செயலக முன்றலில் அனைத்து சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் நேற்று (25) காலை முதல் ஆரம்பமான போராட்டம் இன்று (26) இரண்டாவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக உரிமைகளை திட்டமிடப்பட்டு ஒடுக்கும் நிர்வாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு இரு மாதங்களில் கிடைத்த வெளிநாட்டு பணவலுப்பல்கள்

இலங்கைக்கு இரு மாதங்களில் கிடைத்த வெளிநாட்டு பணவலுப்பல்கள்

போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை

இந்த நிலையில் அரசாங்கம் இனியும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை வழங்கும் வரை எமது அமைதிப்போராட்டம் தொடரும் எனவும்,  இப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம் | People S Protest Continues For 2Nd Day In Kalmunai

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 17.107 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும், 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும், 36, 346 சனத்தொகையினையும், 23,217 வாக்காளர் எண்ணிக்கையையும் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணற்சேனை ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேச செயலகம் ஆகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் 1989ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபர் பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டு 33 வருடங்களுக்கு மேலாக தனது சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது.

யாழில் சீமெந்து தொழிற்சாலையில் திருடிய இருவர் கைது!

யாழில் சீமெந்து தொழிற்சாலையில் திருடிய இருவர் கைது!

கல்முனை தமிழ் பிரிவு

அது ஸ்தாபிக்கப்படும் போது "கரைவாகு வடக்கு (தமிழ்) பிரிவு என குறிப்பிடப்பட்டது. தற்போது "கல்முனை வடக்கு" எனவும் சில இடங்களில் "கல்முனை தமிழ் பிரிவு" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம் | People S Protest Continues For 2Nd Day In Kalmunai

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு 1989/04/06 ஆம் ஆண்டுகளில் வி.அழகரட்டணம், பின்னர் 1991/04/30 ஆம் திகதி கே.பாலசிங்கம், பின்னர்  எஸ். அருண்ராசா ஆகியோர் உதவி அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட 1993/03/17ஆம் திகதி மற்றும் 1993/03/31ஆம் திகதி அமைச்சரவை மசோதாக்களின் ஊடாக இலங்கையில் காணப்படும் சில உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் மற்றும் உப அலுவலகங்களை பிரதேச செயலகங்களாக மாற்றுவதற்காக முன்மொழியப்பட்டது. அதில் கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு பிரதேச செயலக பிரிவு) உள்ளடக்கப்பட்டிருந்தது.

யாழில் அளவிடப்பட்ட காணிகள்! கடும் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

யாழில் அளவிடப்பட்ட காணிகள்! கடும் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில்

அமைச்சரவை உப பிரிவுகளால் சமர்ப்பிக்கப்பட்ட 1993/07/09ஆம் திகதி அறிக்கையின் அடிப்படையில் கல்முனை வடக்கு தமிழ் பிரிவு உள்ளடங்கலாக 28 பிரதேச செயலக பிரிவுகளும் தரம் உயர்த்தப்பட்டு 1993/07/28 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம் | People S Protest Continues For 2Nd Day In Kalmunai

1993/07/28ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சரவை அலுவலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் நிதி அமைச்சுக்கும்    1993/08/04 ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில் அன்றிலிருந்து இன்று வரை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தனித்துவமான பிரதேச செயலகமாக தொழிற்பட்டு வரும் நிலையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, அம்பாறை மாவட்ட செயலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதன் அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் பகுதியில் கல்முனை தலைமையக காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோப் குழுவிலிருந்து விலகியவர்கள் ஐந்து பேர் மாத்திரமே..! எழுத்து மூலமாக அறிவிக்காத சாணக்கியன்

கோப் குழுவிலிருந்து விலகியவர்கள் ஐந்து பேர் மாத்திரமே..! எழுத்து மூலமாக அறிவிக்காத சாணக்கியன்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016