தமிழ் அரசியல்வாதிகளை நோக்கிய ஒரு பாமரனின் வில்லங்கமான கேள்விகள்!!
Sonnalum Kuttram
By Independent Writer
தமிழ் அரசியல்வாதிகளை நோக்கிய சமூகவலைத்தளங்களில் உலாவிவருகின்ற சில கேள்விகள் நியாயமான கேள்விகளாகவும், கேட்கப்பட்டேயாகவேண்டிய கேள்விகளாகவும் இருந்தன.
அந்தக் கேள்விகளைக் ‘கொப்பி அடிப்பதில்’ சொன்னாலும் குற்றம் பெருமை அடைகின்றது:
- தேர்தல் நெருங்கும் போது மாத்திரம் தமிழ் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிப்பது ஏன்?
- தேர்தல் நெருங்கும் போது மாத்திரம் அரசியல்வாதிகள் காணி விடுவிப்பு, அதிகாரப்பகிர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி தொண்டை கிழிய கதைப்பது ஏன்?
- தேர்தல் காலங்களில் அதிகமாக மரண வீடுகள், மக்கள் சார்ந்த நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் பங்கு பற்றுவது மக்களின் நலன்களில் அக்கறையின் பிரதிபலிப்பா?
- வருடத்தில் மாவீரர் தினத்தில் மாத்திரம் அரசியல்வாதிகள் துயிலுமில்லங்களுக்கு செல்வது தங்களது வலியின் உணர்வினாலா அல்லது அரசியல் பிழைப்புக்காகவா?
- மாவீரர் குடும்பங்கள், உறவுகளுக்கு ஒரு வேளை உணவு கொடுக்காத அரசியல்வாதிகளும் கட்சிகளும் தமிழ்தேசியவாதிகளும் ஏன் மாவீரர் தினத்தில் விளக்கேற்ற செல்கின்றனர்?
- தேர்தல் நெருங்குகையில் மாத்திரம் ஜெனிவா அறிக்கைகள், பிரகடனங்கள், சாதனைகள் மேடைகளில் தவழ்வது தமிழ் மக்களின் உரிமைக்குரலுக்காகவா அல்லது அரசியல் நாடகத்துக்காகவா?
- தமிழ் தேசிய கட்சிகள் செய்வது தேர்தல் அரசியலா அல்லது மக்கள் நேய அரசியலா?
- தேர்தல் காலங்களில் புழங்குகின்ற பணம் யாருடையது?
- தமிழ் மக்களுக்கான தீர்வுப்பொதி தமிழ் மக்களுக்காகவா அல்லது அரசியலில் பிழைக்க வந்தவர்களுக்கா?
- கடைசிக் கேள்வி:
தமிழ் தேசிய கட்சிகளுக்கும் அரசுக்குமிடையேயான பேச்சு வார்த்தை தீர்வுக்கு வருமேயானால் தமிழ் தேசிய கட்சிகளுக்கு என்ன நடக்கும்?
5ம் ஆண்டு நினைவஞ்சலி