கையறு நிலையில் ராஜபக்சர்கள்!! வெளிச்சத்திற்கு வந்த தகவல்
government
Patali Champika Ranawaka
people support
By Vanan
இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வுத் தகவலுக்கு அமைய, தற்போதைய அரசாங்கத்திற்கு 20 சதவீத மக்கள் ஆதரவு மாத்திரமே காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka )தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியான கடுவெல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பிக்க ரணவக்க,
அரசாங்கத்திற்கு மக்கள் ஆணையில் நம்பிக்கை இருந்தால் உடனடியாக பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பணம் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்தால் இச்சதவீதத்தை அதிரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, எரிசக்தி நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் முன்னைய நிர்வாகத்தை உதாரணமாகக் கொள்ளுமாறு அவர் அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
