யுத்தம் மௌனிக்கப்பட்ட இடத்தில் இருந்தே மக்கள் போராட்டம் மீள் எழுச்சி பெறும்!

Attack Journalist Democratic Fighters Party I.Katir
By MKkamshan Nov 29, 2021 04:14 AM GMT
Report

முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்க்கு பயங்கரவாதம் என்று பெயர் சூட்டிய இந்த அரசு மீண்டும் முள்ளிவாய்க்காலில் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் (I.Katir)  தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட கொடூரமான தாக்குதல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

  அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மாவீரர் நாள் அன்று முள்ளிவாய்க்காலில் வைத்து இலங்கை அரச பயங்கரவாதம் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் எல்லைக்குட்பட்ட பெயர்ப் பலகையை புகைப்படம் எடுக்கச் சென்ற முல்லைத்தீவு ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியளாளரே இலங்கை இராணுவத்தால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவமானது அரச பயங்கராவாதத்தின் உண்மை முகத்தை காட்டி நிற்க்கின்றது.

ராஜபக்ச அரசாங்கம் தன்னுடய நீதியற்ற செயலை இந்த உலகிற்கு மீண்டும் அம்பலப்படுத்தி நிற்கின்றது. 

இந்த உலக மேடையில் நாடகம் ஆடும் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவு வழங்கும் சர்வதேச சமூகம் இந்த ஊடக சமூகத்தின் மீது தாக்குதல் நடாத்திய சம்பவத்தை நியாயம் கேட்கப்போகின்றதா?

உலகத்தின் பயங்கரவாத செயற்பாடுகளின் அதி உச்சகட்ட நிலையை சிங்கள அரசு காட்டியிருக்கின்றது. சர்வதேசமே நீதியையும் ஜனநாயகத்தையும் போதிக்கின்ற வல்லலரசு நாடுகளே உங்களுக்கு இலங்கையில் நடக்கின்ற அநீதிகள் புரியவில்லையா?

அல்லது இதுவும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த நடவடிக்கை என்று சொல்லி வேடிக்கை பார்க்கப் போகின்றீர்களா?

உலகத்தில் அநீதி நடக்கும் இடமெல்லாம் நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட ஐ.நா சபையே நீதி இங்கு நிலை நாட்டப்படுமா?

ஒரு சமூகத்தின் குரலாக ஒலிக்கின்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் நாடாத்தி அதை அடக்கி எமது உரிமைக் குரலை அடக்க நினைக்கும் சிங்கள அரச பயங்கரவாதத்திற்குத் துணை நிற்காமல் நீதிக்கும் ஜனநாயகத்திற்குமாக குரல் கொடுக்கும் எமது ஊடகவியலாளர்களுக்கு நியாயம் பெற்றுத்தர சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.

இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழும் தாயக பூமியில் இவ்வாறு தொடர் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் ஊடகவியளாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் வரை மாபெரும் மக்கள் போராட்டங்களை நாம் தொடர்ந்து நாடாத்தத் தயங்கமாட்டோம்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட இடத்தில் இருந்தே மக்கள் போராட்டம் மீள் எழுச்சி பெறும் என்பதனை நாம் இலங்கை அரசாங்கத்திற்க்குத் தெரிவித்துக் கொள்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015