பேராதனை பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்
கடுகண்ணாவை காவல் பிரிவின் உரபொல சந்தி பகுதியில் நடந்த சாலை விபத்தில் பேராதனை பல்கலைக்கழகஅறிவியல் பீடத்தின் 24 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடுகண்ணாவை-கொழும்பு பிரதான சாலையில் நேற்று (28) இரவு மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர், கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்களை ஏற்றிச் செல்லும் கரியர் வாகனத்துடன் மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அறிவியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவன்
உயிரிழந்தவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவரான அர நாயக்க பகுதியைச் சேர்ந்த திவங்க பியதிஸ்ஸ (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் 24 வயது சாரதி கடுகண்ணாவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
