மாயமான பல்கலை மாணவன் - மீட்கப்பட்ட கடிதத்தையடுத்து தீவிரமாக களமிறங்கியுள்ள காவல்துறை!
Sri Lanka Police
University of Peradeniya
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
கண்டி பேராதனை பல்கலைக்கழக கலை பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு நேற்று (18) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யக்கல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய அஞ்சன குலதுங்க என்ற இளைஞனே காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணை
காணாமல் போன மாணவன் கடந்த 16ஆம் திகதி எழுதியதாக சந்தேகிக்கப்படும் கடிதம் ஒன்று அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து கண்டெடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், குறித்த மாணவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி