கழிவறையில் சடலமாக கிடந்த யாழ் மாணவன் - பேராதனை பல்கலையில் நடந்த சம்பவம்
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவரின் சடலம் ஒன்றை பேராதனை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இன்று (16) காலை பல்கலைக்கழகத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையிலேயே குறித்த சடலத்தை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாண மாணவன்
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை - நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையின் கழிவறையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள் பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பேராதனை பல்கலைக்கழக நிர்வாகமும் பேராதனை காவல்துறையினரும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
