மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை; துலங்காத பின்னணி
பெண் வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
பேராதனை போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் 54 வயதுடைய பெண் வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கடுகன்னாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்காண காரணம்
குறித்த வைத்தியர் ஊராபொல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
மருத்துவரின் வீட்டில் அவரது தாய், கணவர் மற்றும் உறவினர் ஒருவரும் வசித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் மருத்துவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 5 நாட்கள் முன்
