பேராதனை பல்கலை மாணவியே பாறையில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழப்பு(படங்கள்)
Sri Lanka Police
University of Peradeniya
Death
By Sumithiran
பேராதனை பல்கலைக்கழக மாணவி
எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய விரஷ்மி கொடித்துவக்கு என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
60 மாணவர்கள் வருகை
இவர் உட்பட சுமார் 60 மாணவர்கள் இன்று காலை பேராதனையிலிருந்து பயணிகள் பேருந்துகளில் சரடியல் பாறையைப் பார்க்க வந்துள்ளனர். பின்னர் அவர் உத்துவான்கண்டேயிலிருந்து மலையில் ஏறி சரடியல் பாறையை பார்வையிட முயன்றதாகவும் மலை உச்சியில் இந்த விபத்து நடந்திருக்க வேண்டும் எனவும் மாவனல்லை காவல் நிலைய பிரதான பரிசோதகர் லசந்த களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த மாணவி தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார், ஆனால் அவர் இன்னும் அதே பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கல்வியைத் தொடர்கிறார் என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது சடலம் மாவனெல்லை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாவனல்லை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 13 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி