விடுதலைப் புலிகளின் காலம் தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட தகவல்
S. Shritharan
period
golden time
By Vanan
தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
கலாலயத்தின் விழுதொலிகள் இறுவட்டினை வெளியிட்டு வைத்து உரையாற்றிய அவர், கலைஞர்கள் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கு மகத்தானது எனக் குறிப்பிட்டார்.
தங்களின் கலைப்படைப்புகளால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சிகொள்ள வைத்தவர்கள் என்றால் மிகையில்லை.
கலைஞர்களும் இந்த மண்ணில் மீண்டு, உரிய அந்தஸ்தத்தோடு வாழும் காலம் உருவாக்கப்படும்.
போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இது உண்மை தான் என அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி