கோட்டாபய மாதத்தில் ஒருமுறையாவது மக்களுடன் உரையாட வேண்டும்! அரச தலைவருக்கு அமைச்சர் அறிவுரை
மாதம் ஒரு முறையாவது அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மக்களுடன் உரையாடலில் ஈடுபட வேண்டும் என தனிப்பட்ட முறையில் தாம் கருதுவதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் தான் கிராமங்களுக்குச் சென்று மக்களுடன் உரையாடுவது வழக்கம் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடியின் நிலையில் அரச தலைவர் மக்களுடன் நெருங்கிச் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
அரச தலைவரின் நேற்றைய உரையை குறித்து விளக்கமளித்த அமைச்சர் குறிப்பிட்டதாவது,
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியினால் அவதியுறுவோரை குறிப்பிட்டு உரையை ஆரம்பித்த அரச தலைவர், இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தை அணுகவுள்ளதாக உறுதியளித்ததாகவும், அதனை முன்னெடுப்பதற்கு அனைவரினதும் ஆதரவை கோருவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, மக்களுடன் நெருங்கி செயற்படுவது அரச தலைவரின் எதிர்கால அரசியலிற்கு உதவும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.
