கனமழையால் காய்கறிப் பயிர்களுக்குப் பாதிப்பு: சந்தையில் காய்கறிகளின் விலைகள் திடீர் உயர்வு
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் காய்கறிப் பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், சந்தையில் பல்வேறு காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சியின் விலை 500 முதல் 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அதேபோன்று, ஒரு கிலோ கரட்டின் விலை 360 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் கவலை
மேலும், ஒரு கிலோ கோவாவின் விலை 500 முதல் 600 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ பீட்ரூட்டின் விலை 350 ரூபாயாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் காய்கறிப் பயிர்கள் சேதமடைந்துள்ளதுடன், அறுவடை மற்றும் விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் காரணமாகச் சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைவடைந்து, விலைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அன்றாட உணவுத் தேவைகளுக்காகக் காய்கறிகளைக் கொள்வனவு செய்யும் பொதுமக்கள் மேலதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவினால், காய்கறி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், சந்தையில் விலைகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |