பேருந்திலிருந்து இறங்கிய நபர் உயிரிழப்பு : யாழ் நாவற்குழியில் சம்பவம்
Jaffna
Nothern Province
Srilankan Tamil News
By Kathirpriya
யாழ்ப்பாணம் - நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் வருகை தந்தவர் பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கராசா சதீஸ்குமார் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக
மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்