கொழும்பில் அமெரிக்க தூதரகம் அவமதிப்பு : சமிக்ஞை விளக்கில் காத்திருந்தவர் சிக்கினார்
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் 62 வயதுடைய நபர் ஒருவர் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தூதரகம் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனிடம் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசி மூலம் அவமதிப்பு
கடந்த 26ஆம் திகதி கிரிபத்கொட கண்டி வீதியிலுள்ள பிரபல புத்தக விற்பனை நிலையமொன்றில் உள்ள தரைவழி தொலைபேசி மூலம் சந்தேகநபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்க தூதரகத்தை திட்டியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கிரிபத்கொட சமிக்ஞைக்கு அருகில் காத்திருந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இரத்மலானை, இடமல் மாவத்தையைச் சேர்ந்த சந்தேக நபர், மஹர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார். கிரிபத்கொட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |