இராணுவ தாக்குதலில் பலியான இளைஞன் : கொழும்புக்கு அனுப்பப்படவுள்ள உடற்கூற்று மாதிரிகள்
புதிய இணைப்பு
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது.
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினால் வரவழைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகி மாயமாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் உடற்கூற்று பரிசோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், உடற்கூற்று பரிசோதனையின் மேலதிக பகுப்பாய்வுக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினால் வரவழைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகி மாயமாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவரின் உடற்கூற்று பரிசோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) குறித்த சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை நடைபெற்று வருகின்றது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07.08.2025 அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்தையன்கட்டு குளத்திலிருந்து நேற்று (09) சடலமாக மீட்கப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி உள்நாட்டில் இல்லாத காரணத்தினால் யாழ் போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனையை மேற்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த இளைஞனை தாக்கி கொலை செய்து சடலத்தை குளத்தில் இட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
குளத்திலிருந்து சடலத்தை மீட்ட போது உயிரிழந்த நபரின் முகம் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும் கண்ணிலிருந்து இரத்தம் வந்திருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
