சட்டவிரோதமாக மான் ஒன்றை வைத்திருந்த நபர் - நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
Srilanka
person
Explanation
deer
illegally
By MKkamshan
மட்டக்களப்பு பங்குடாவெளி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் அனுமதியின்றி மான் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியானாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சம்பவதினமான நேற்று இரவு 6.45 மணியளவில் பங்குடா வெளி பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை கரடியனாறு காவல்துறையினருடன் வனவிலங்கு அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு மறைத்து வைத்திருந்த சுமார் 5 வயதுடைய மான் ஒன்றை மீட்டதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்து அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது அவரை எதிர்வரும் 9 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மானை வனவிலங்கு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்