அரச வங்கியொன்றில் மோசடி செய்த நபர் கைது!
Sri Lanka Police
Badulla
Sri Lanka Police Investigation
By Kathirpriya
அரச வங்கி ஒன்றின் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்திலிருந்து 2 இலட்சம் ரூபா பணத்தை மோசடியாப் பெற்ற நபர் தியதலாவை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பதுளை - தியத்தலாவை பிரதேசத்தில் உள்ள தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்திலிருந்தே குறித்த நபர் பணத்தை மோசடியாக பெற்றுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
பதுளை ஹல்தும்முல்ல பிரதேசத்தை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றிலிருந்தே குறித்த சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்