கைதிக்கு பற்பசையில் போதைப்பொருள் கொண்டு வந்தவர் சிக்கினார்
Colombo
Department of Prisons Sri Lanka
Prison
By Sumithiran
கொழும்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு கொண்டுவரப்பட்ட பற்பசையில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (17ஆம் திகதி) பிற்பகல் 01.40 மணியளவில் கொழும்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை பார்ப்பதற்காக ஒருவர் வந்துள்ளார்.
கவமனாக மறைத்து வைப்பு
சந்தேக நபரிடம் கொண்டு வரப்பட்ட பற்பசை குழாயில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 01 பொதியும், ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 01 பொதியும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
படை அதிகாரிகளால் சந்தேகநபர் கைது
பார்வையாளர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அவசரகால பதில் தந்திரோபாயப் படை அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் சந்தேகநபரின் நண்பரும் மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்தவருமாவார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்