நடுவானில் நிலை குலைந்த சிங்கப்பூர் விமானம்: பலருக்கு பாதிப்பு
பிரித்தானிய தலைநகர் லண்டனில் (London) இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த சிங்கப்பூர் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கொந்தளிப்பான வளிமண்டலத்துக்குள் சிக்கியதால் விமானத்துக்கு உள்ளே ஒருவர் பலியாகி 30 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
SQ321 என்ற அடையாளப் பதிவைக்கொண்ட இந்த போயிங் ரக விமானம் தாய்லாந்து வான் பரப்புக்கு அண்மையில் கொந்தளிப்பான வளிமண்டலத்துக்குள் சிக்கியுள்ளது.
211 பயணிகளின் நிலை
இதன்போது, திடிரென ஏற்பட்ட இந்த கொந்தளிப்பு காரணமாக விமானம் நிலை குலைந்ததால் உள்ளேயிருந்த 211 பயணிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அவசரமாக தரையிறக்கம்
அதனையடுத்து, விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது.
பின்னர், விமானத்தில் இருந்து காயமடைந்தவர்கள் உடனடியாக பாங்கொக் மருத்துவனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |