கனடாவில் வீட்டு வருமான வரி தொடர்பில் வெளியான அறிவிப்பு
வீட்டு வரி தொடர்பில் கனேடிய (Canada) வருமான முகவர் நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் வீட்டு உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய வரியை வீட்டு குடியிருப்பாளர்களிடம் அறவீடு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில், அமைச்சர் மேரி க்ளாவுட் பிபியே(Marie-Claude Bibeau) தனது எக்ஸ் (x) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வரி அறவீடு
இதன்போது, கனடாவிற்கு வெளியே இருக்கும் ஒருவருக்கு சொந்தமான சொத்து ஒன்றுக்கு, வீட்டில் குடியிருப்போரிடம் வரி அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
My statement on taxes for non-resident landlords
— Marie-Claude Bibeau (@mclaudebibeau) May 17, 2024
///
Ma déclaration sur les impôts de propriétaires non-résidents pic.twitter.com/Tjss4i9pW4
அத்துடன், வரி அறவீடு தொடர்பில் தேசிய வருமான அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |