புதிய வருமான வரிக் கொள்கை - அரச தரப்பு வெளியிட்ட தகவல்

Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Vanan Feb 07, 2023 11:29 AM GMT
Report

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான ஒரு குறுகிய கால உத்தியாகவே தனிநபர் வருமானம் அடிப்படையில் வரி விதிப்பு செய்யப்படுவதாகவும், இப்புதிய வரி விதிப்பு முறை ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சதவீதமென்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க தெரிவித்தார்.

புதிய வரி அறவிடும் முறை தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, சில நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான குறுகிய கால உத்திகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சேனாநாயக்க தெரிவித்தார்.

புதிய வருமான வரிக் கொள்கை

புதிய வருமான வரிக் கொள்கை - அரச தரப்பு வெளியிட்ட தகவல் | Personal Income Taxation Sl Economic Strategy

புதிய வரிக் கொள்கை தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் பணிப்புரைக்கமைய, அதிபரின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று (06) நிதியமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வருமான வரிக் கொள்கை தொடர்பில் அரச மற்றும் அரச இடையீட்டு நிறுவன ஊழியர்களுக்கிடையே சில பிரச்சினைகள் உருவாகியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர்கள் எதிர் நோக்கியுள்ள அசௌகரியங்களைக் கருத்திற் கொண்டே தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அவசியமான கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமென்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க அரச வருமானம் மற்றும் அரச செலவினங்கள் தொடர்பிலும் வருடாந்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை சமாளிக்க அரசு பின்பற்றும் நிதி உத்திகள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.

“அதனடிப்படையிலேயே தனிநபர் வருமானத்திலிருந்து வரி விதிக்கப்படுகிறது. இது ஆசிய நாடுகளுடன் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான சதவீதம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

தனிநபர் வருமான வரி

புதிய வருமான வரிக் கொள்கை - அரச தரப்பு வெளியிட்ட தகவல் | Personal Income Taxation Sl Economic Strategy

மேலும், இலங்கையின் நிதி நிலைமை, வரி விதிப்பு தொடர்பிலுள்ள தனிநபர் பிரச்சினை, தனிநபர் வருமான வரி தொடர்பான வரி சீர்திருத்தங்கள், தனிநபர் வருமான வரிகளை அதிகரிப்பது மற்றும் வரி சீர்திருத்தத்தின் தாக்கங்கள் ஆகியவை தொடர்பிலும் கலாநிதி கபில சேனாரத்ன விளக்கமளித்தார்.

புதிய வரிச் சட்டத்துக்கமைய வரி செலுத்தப்பட வேண்டிய நபரிடமிருந்து தனிநபர் வருமானம் கணக்கிடப்படும் முறை தொடர்பில் உள்நாட்டு வருமானத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி வருமான ஆணையாளர் கே.கே.ஐ எரந்த பல்வேறு வரிச் சட்டங்களை கோடிட்டுக் காட்டியதன் மூலம் விளக்கினார்.

இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த தொழிற்சங்கத் தலைவர்கள், இப்புதிய வரிக் கொள்கை காரணமாக தனிநபர் வருமானம் அடிப்படையில் அறவிடப்படும் வரியில் பிரச்சினை இருப்பதாகவும் வரிக் கொள்கையை தயாரிப்பதற்கு முன்னதாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்துமாறும் கேட்டுக் கொண்டனர்.

ஏனைய நாடுகளைப் போன்றே விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ற நியாயமான சேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், புதிய வரிச் சட்டத்தால் தொழில்துறையைச் சார்ந்தோர் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் குறைப்பதற்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மேலும் கோரினர்.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி