24 உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து - சோகத்தில் மூழ்கிய பெரு
பெருவில் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து குன்றின் மீது கவிழ்ந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
60 பயணிகளை சென்ற குறித்த பேருந்து , சனிக்கிழமை வடமேற்கு பெருவில் உள்ள குன்றில் இருந்து கவிழ்ந்ததை தொடர்ந்து, அதில் 24 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக உள்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லிமாவில் இருந்து ஈக்வடார் எல்லையில் உள்ள டும்பஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த கொரியாங்கா டூர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, ஆர்கனோஸ் நகருக்கு அருகே சாலையில் டெவில்ஸ் வளைவு" என்று அழைக்கப்படும் கடினமான இடத்தில் விபத்திற்குள்ளாகியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தூக்கி வீசப்பட்ட பயணிகள்
At least 25 people died when a bus carrying 60 passengers plunged over a cliff in northwestern #Peru, police say.https://t.co/ztfRchiwI5
— Al Arabiya English (@AlArabiya_Eng) January 29, 2023
மேலும் விபத்திற்கான முழுமையான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பயணிகள் லிமாவிற்கு வடக்கே சுமார் பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பிரபலமான ரிசார்ட்டுகளான எல் ஆல்டோ மற்றும் மன்கோராவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சில பயணிகள் ஹெய்ட்டி-யை சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது பல பயணிகள் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டனர் என்றும் சிலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர் என தகவல் தெரியவந்துள்ளது.

