வித்யா படுகொலை குற்றவாளி சுவிஸ் குமாரின் மேல்முறையீடு! நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
2015 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை இன்று (6) நிறைவடைந்தது.
தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை முடிவடைந்துள்ளது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அதன்படி, மனுவின் விசாரணை தொடர்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு செய்துள்ளது.

இந்த மனுவின் விசாரணை தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் இடம்பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |