சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி ஐ.நா அலுவலகத்தில் மனு கையளிப்பு!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு, நீதி கோரி பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவொன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
சலேவுக்கு ஆதரவளிக்கும் ஓரு குழுவினரால் இந்த மனு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளிடம் இன்று (20) கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் தன்னிச்சையான தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் சுரேஷ் சலே 175 நாட்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறித்த மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை
இந்த நிலையில் சுரேஷ் சலே நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, அவருக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரி இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கையெழுத்துகளுடன் கூடிய இந்த மனு சலேவின் தடுப்புக்காவல் தொடர்பான கவலையை சர்வதேச மட்டத்தில் எடுத்துரைக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |