இலங்கையர்களுக்கு அமெரிக்க விசாவில் கெடுபிடி அதிகரிப்பு...! வெளியான அறிவிப்பு
மக்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுக்கும் முதன்மை நோக்கத்துடன், அமெரிக்காவில் குழந்தையைப் பிரசவிப்பதற்காகச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தூதரகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலா விசா விண்ணப்பங்கள்
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒருவர் அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் பிரதான நோக்கம், அங்கு குழந்தையைப் பிரசவித்து அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதே என அமெரிக்கக் கொன்சியூலர் (Consular) அதிகாரிகள் கருதினால், விண்ணப்பதாரிகளின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும்.

இவ்வாறான நோக்கங்களுக்காகச் சுற்றுலா விசாவைப் பயன்படுத்துவது அமெரிக்க சட்ட திட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டதொன்றல்ல எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய விசா விண்ணப்பங்களை அமெரிக்கக் கொன்சியூலர் அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனவும் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |