யோஷித - கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யபட்டுள்ளன.
இதன்படி இன்று (20.08.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த இருவரும் எதிரான குற்றப்பத்திரிகைகள் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யபட்டுள்ளது.
குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரு பிரதிவாதிகளையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்பத்திரிக்கை
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

2006 ஆம் ஆண்டு யோஷித ராஜபக்ச தகுதிகளின்றி கடற்படையில் இணைக்கப்பட்டமை மற்றும் அரச நிதியைப் பயன்படுத்தி பிரித்தானியாவில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டமை ஆகியவற்றுக்கு உடந்தையாக இருந்ததாக இவர்கள் மீது குற்றம் முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும் தகுதியின்றி யோஷித ராஜபக்சவை கடற்படையில் சேர்த்தமை மற்றும் அரச நிதியில் வெளிநாட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தமை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்குகமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4