சட்டவிரோதமாக தொல்பொருட்கள் தேடி அகழ்வில் ஈடுபட்ட எட்டு சந்தேக நபர்கள் கைது
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் தொல்பொருள் கலைப்பொருட்களைத் தேடி சட்டவிரோதமாக அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பாரதிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 32 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் முந்தலம், உக்குவெல, தும்மலசூரிய, பிலியந்தலை, யாழ்ப்பாணம், மாதம்பே மற்றும் கெசல்வத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு பேர் கைது
சந்தேக நபர்கள் தொல்பொருள் பெறுமதியுடைய கலைப்பொருட்களைத் தேடி குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4