முல்லைத்தீவில் மாணவர்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த இ.போ.ச. சாரதி..! கிளம்பியுள்ள எதிர்ப்பு
முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு மாணவர்களை ஏற்றமுடியாது என மறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்ப்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம், கிழவன்குளம் மற்றும் திருமுறிகண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு ஏ 9 வீதியில் பலநூற்றுக்கணக்கான பேருந்துகள் பயணம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், உரிய நேரத்தில் பாடசாலை செல்லவோ பாடசாலையில் இருந்து வீடுசெல்லவோ முடியாத நிலை பல வருடகாலமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
பிரச்சினைக்கு தீர்வு
இவ்வாறான பின்னணியில் இன்று (05-10-2026) மாங்குளம் மகாவித்தியாலயம் முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில பாடசாலை முடிந்து ஆசிரியர்கள் மாணவர்கள் காத்திருந்துள்ளனர்.
இதன்போது வருகை தந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று ஆசிரியர்களை மாத்திரம் பேருந்தில் ஏற்றிவிட்டு மாணவர்களை ஏற்றாது செல்ல முட்பட்ட போது மாணவர்களை ஏற்றுமாறு கோரிய போது ஏற்ற முடியாது என தெரிவித்து பேருந்தில் ஏறிய மாணவர்களை ஏறமுடியாத அளவில் பேருந்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன் போது பேருந்தில் ஏறிய மாணவி ஒருவர் தவறி விழ போன நிலையில் நடத்துனரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறான சாரதிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறுவர் உரிமைகள் தொடர்பில் பேசும் அனைவரும் பலவருடங்களாக தொடரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிபபிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |