திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! சிறையில் உள்ள கஸ்ஸப தேரரின் அடுத்த நகர்வு
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு கஸ்ஸப தேரர் மற்றும் இரண்டு பிக்குகளால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை 22 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது, பின்னர் உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக 22 ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டது.

திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஐந்து பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |