தொழிலதிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்
அதுருகிரிய, கல்வருசாவ வீதியிலுள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது இன்று (09) மாலை பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நவகமுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தகருக்கு சொந்தமான வீட்டின் முன் மலர்வளையம் வைக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்கள் மூவர் நவகமுவ காவல்துறையினர்கைது செய்யப்பட்டிருந்தனர்.
கப்பம் கோரப்பட்டு கொடுக்க மறுத்ததால் வந்த ஆத்திரம்
வெளிநாட்டில் இருக்கும் கொரத்தோட்ட "கைவரு முத்து" என்ற பாதாள உலக செயற்பாட்டாளர், குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரியுள்ளதாகவும், பணத்தை தர மறுத்ததன் காரணமாக அவரை அச்சுறுத்தியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக நவகமுவ காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஹரகம பமுன்வ பிரதேசத்தில் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வரும் இந்த கோடீஸ்வர வர்த்தகர் மேலும் பல ஆடைத் தொழிற்சாலைகளை வைத்திருப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |