வெளிநாட்டில் இருந்து வந்த பணம் - யாழில் வீடொன்றை தீக்கிரையாக்கிய வன்முறைக்குழு (படங்கள்)
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By pavan
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பூதவராயர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் குறித்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
கூலிப்படை தாக்குதல்

வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் தாக்குதலாளிகளை இனம் கண்டுள்ளதாகவும், வெளிநாட்டில் இருந்து தாக்குதலுக்கு பணம் கொடுத்து, கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி