யாழில் பெற்றோல் குண்டுத்தாக்குதலை நடத்தியவர்கள் சிக்கினர்
arrest
police
jaffna
bomb blast
By Sumithiran
யாழ்ப்பாணம் மானிப்பாயில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து பெற்றோல் குண்டுத்தாக்குதலை நடத்தி வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக்குள் புகுந்த கும்பல் பெறுமதியான பொருள்களை சேதப்படுத்தியதுடன் பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டிருந்தது.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 20 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி