தொலைபேசியில் பேசிக்கொண்டு வீதியை கடந்த மாற்றுத்திறனாளிக்கு நேர்ந்த அவலம்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
தொலைபேசியில் பேசிக் கொண்டு வீதியைக் கடந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் காதை மற்றுமொரு இளைஞர் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பாதசாரிக்கடவையில் தொலைபேசியில் கதைத்துக்கொண்டு சென்றமையால், அதனை அவதானித்த பிறிதொரு நபர், கோபமடைந்து கத்தியினால் அவரது காதை துண்டித்துள்ளார்.
மாற்றுத்திறனாளியின் காதை துண்டித்தமை

பாதிக்கப்பட்ட குறித்த நபர் விசேட தேவையுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், விசேட தேவையுடையவரின் காதை துண்டித்தது மட்டுமல்லாமல், அவரை கீழே தள்ளி தாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை தேடி மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி