தொலைபேசி பேச்சு கசிவு :வெளிநாடொன்றின் பெண் பிரதமருக்கு ஏற்பட்ட நிலை
தொலைபேசி பேச்சு கசிவு தொடர்பாக தாய்லாந்து(thailand) பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ராவை, அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம், ஜூலை 1 முதல் பிரதமர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. எல்லையில் உள்ள எமரால்டு முக்கோணம் எனப்படும் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே மே 28ல் மோதல் ஏற்பட்டது.
கசிந்த உரையாடல்
இதில், கம்போடியோ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், செனட் சபை தலைவருமான ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா 17 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.
அப்போது பிரதமர் ஷினவத்ரா, தாய்லாந்து இராணுவ தளபதியை எதிரி என்றும், பயனற்றவற்றை பேசுவதாகவும் கூறியிருந்தார். இந்த உரையாடல்கள் கசிந்தன.
பிரதமர் பதவியிலிருந்து இடைநீக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த தாய்லாந்தின் அரசியல் சாசன நீதிமன்றம், பிரதமர் ஷினவத்ரா நெறிமுறைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியது. மேலும் இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட இருப்பதால், பிரதமரை பதவியில் இருந்துநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு குறித்து ஷினவத்ரா கூறியதாவது: எனது பணிக்கு இடையூறு ஏற்படுவதை நான் விரும்ப வில்லை. நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்கிறேன். நீதிமன்ற உத்தரவால் நான் வேதனையில் உள்ளேன். இவ்வாறு ஷினவத்ரா கூறினார். இந்நிலையில் தாய்லாந்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
