பிரித்தானியாவில் மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை

Sri Lanka United Kingdom Law and Order
By Sathangani Feb 21, 2026 04:25 AM GMT
Report

பிரித்தானியாவில் தனது மனைவியைக் கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரிந்து வாழ்ந்த தனது மனைவியை வாகன நிறுத்துமிடத்தில் வைத்து கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய திசர வேரகலகே என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

32 வயதுடைய நிரோதா என அழைக்கப்படும் நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா, 2025 ஓகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி...! வலுக்கும் கண்டனம்

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி...! வலுக்கும் கண்டனம்

நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

பல மாதங்களாக குறித்த நபர், ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டை மறுத்த போதிலும், பின்னர் ஜனவரி மாதம் நியூபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கார்டிப் கிரவுன் நீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி டேனியல் வில்லியம்ஸ், வேரகலகேயின் "கொடூரமான சுயநலம்" நிரோதாவின் வாழ்க்கையைச் சுருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை | Srilankan Jailed For Life In Uk After Killing Wife

தாக்குதல் நடந்த அன்று காலை, நிரோதா அங்கு இருப்பார் என்பதை அறிந்து வேரகலகே 15 செ.மீ நீளமுள்ள சமையலறைக் கத்தியுடன் வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு நிரோதாவின் முகம், கழுத்து, மார்பு, கை மற்றும் கால்களில் மிகக் கொடூரமான முறையில் கத்தியால் குத்தியுள்ள நிலையில் இரண்டு கார்களுக்கு இடையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிரோதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலைக்குப் பிறகு தனது காரில் வேகமாகத் தப்பிச் சென்ற குறித்த நபர், சிறிது நேரத்தில் லொறி ஒன்றின் முன்னால் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.

யாழ் சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்

யாழ் சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்

 காவல்துறையினரால் கைது

எனினும், அவர் உயிருடன் மீட்கப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன் அவரது காரில் இரத்தக் கறையுடன் கூடிய கையுறைகளும், கத்திகள் அடங்கிய பொதியும் கண்டெடுக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில், இந்தத் தம்பதியினர் 2017ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்து கொண்டு, பின்னர் 2022 இல் பிரித்தானியாவிற்கு குடிபெயர்ந்தமை தெரியவந்தது.

பிரித்தானியாவில் மனைவியைக் கொன்ற இலங்கையருக்கு ஆயுள் தண்டனை | Srilankan Jailed For Life In Uk After Killing Wife

அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2025 ஏப்ரல் முதல் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்தத் திட்டமிட்ட கொலையைச் செய்துள்ளார்.

"நிரோதா தனது குடும்பத்தினரால் மிகவும் நேசிக்கப்பட்டவர். ஒரு கோழைத்தனமான மற்றும் பொறாமை கொண்ட நபரால் அவரது வாழ்க்கை முடிக்கப்பட்டுள்ளது" என்று தெற்கு வேல்ஸ் காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் அமெரிக்க கப்பல் - உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பு

இலங்கை வரும் அமெரிக்க கப்பல் - உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026