காவல்துறை பொறுப்பதிகாரியின் புகைப்படத்திற்கு வெள்ளை மாலை அணிவித்த மர்ம நபர்!
மிரிஹான காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் பெண் தலைமை காவல் பொறுப்பதிகாரி வருணி கேஷலா போகஹவத்தவின் அலுவலகத்தில் உள்ள அவரது புகைப்படத்திற்கு அடையாளம் தெரியாத நபரொருவரால் மாலை அணிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நுகேகொட மூத்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
மிரிஹான காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வந்த ஒருவர், அங்கு தலைமை காவல் பொறுப்பதிகாரி இல்லாத சந்தர்ப்பத்தில் அவரது புகைப்படத்தில் ஒரு வெள்ளை மாலையை வைத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
மருத்துவமனையில் சிகிச்சை
எனினும், குறித்த பிரிவின் தலைமை காவல் பொறுப்பதிகாரி வருணி போகஹவத்த, தற்போது சிக்கன்குனியா தொற்று காரணமாக நாரஹேன்பிட்டிய காவல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எந்த நோக்கத்திற்காக இவ்வாறு தலைமை காவல் பொறுப்பதிகாரியின் புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த தலைமை காவல் பொறுப்பதிகாரி வருணி போகஹவத்த, மாத்தறை தலைமையக காவல்துறை நிலையத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு மிரிஹான காவல்துறை நிலையத்தின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
