கனடாவில் தேடப்படும் நபர் : காவல்துறை வெளியிட்ட புகைப்படம்
கனடாவின்(canada) ரொறன்ரோவில்(toronto) தொடருந்தில் பயணம் செய்த ஒருவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
குறித்த நபர் அதே தொடருந்தில் பயணம் செய்த சக பயணியுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டன்போர்த் மற்றும் டொனால்ட்ஸ் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவரும், தகாத முறையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நபரும் ஒரே தொடருந்து நிலையத்தில் இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றம் சுமத்தப்பட்ட நபர்
எனினும் குற்றம் சுமத்தப்பட்ட நபர் தொடருந்து நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்தேக நபர் பற்றிய புகைப்படமொன்றை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |