கொடிகாமம் வைத்தியசாலையில் குழப்பம்: வைத்தியர் இடமாற்றம்! வெளிவந்த பின்னணி
Sri Lanka Police
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Kiruththikan
யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள அரச வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட குழப்பத்தையடுத்து அங்கு பணியாற்றிய வைத்தியர் யாழ். கோப்பாய் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
குறித்த வைத்திய சாலையில் தனது தாத்தாவுக்கு சிகிச்சை பெறவந்த யுவதியிடம் வைத்தியர் தொலைபேசி இலக்கத்தை கேட்டதையடுத்து யுவதி தன்னிடம் தொலைபேசி இல்லையென கூறியுள்ளார்.
இதனையடுத்து வைத்தியர் தனது தொலைபேசி இலக்கத்தை கொடுத்துள்ளார்.
வைத்தியசாலையில் குழப்பம்
இதனை தனது உறவினர்களிடம் குறித்த யுவதி தெரிவித்துள்ளார்.
இதனால் யுவதியின் உறவினர்கள் 8 பேர் குறித்த வைத்தியரை தாக்க வந்ததையடுத்து வைத்தியசாலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதன் பிற்பாடே பிரச்சினைக்கு காரணமான வைத்தியர் இடமாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மரண அறிவித்தல்