64 பக்க ஆவணங்களுடன் மௌலானா சரண்! வெளிவரும் சதித்திட்ட பின்னணி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளரான அசாத் மௌலானா - பிள்ளையானுக்கு இடையிலான மோதல் பணத்திற்காகவே தோன்றியிருக்கலாம் என புலனாய்வு செய்தியாளர் எம். எம் நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்களை வழங்கிய அசாத் மௌலானா ஒரு வலுவான சாட்சி. 64 பக்கங்களை கொண்ட ஆவணத்தை ஐ.நாவிடம் வழங்கியுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்கள் குறித்து ஊடறுப்பு நிகழ்ச்சியில் கருத்துரைக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
''அசாத் மௌலானா இலங்கையில் இருந்து தப்பிச் செல்லுகையில் இந்தியாவினூடாகவே சென்றுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவிலும் அவரை கொலை செய்வதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும் அவரது இருப்பிடம் சரியாக தெரியவராததன் காரணத்தினால் மௌலானாவை கொலை செய்வதற்கான திட்டமிடல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
குறிப்பாக அவர் இலங்கையில் இருந்திருந்தால் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு.' தற்போது கூட சுவிஸில் அவரை கூலிப்படைகள் நோட்டமிட வாய்ப்புள்ளது' என தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக அசாத் மௌலானாவின் தொடர்புகளும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விளைவுகளும் இலங்கை அரசியலில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்கிறது இந்த ஊடறுப்பு