உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல்
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பிள்ளையானுக்கு(pillaiyan) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்ளுடன்(easter atack) தொடர்பு உள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால(anada wijepala) தெரிவித்தார்.
இன்று(10) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிள்ளையான் தொடர்பில் கிடைத்த தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் பிள்ளையானை தொடர்புபடுத்தும் கணிசமான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.அது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எந்தவொரு குற்றத்தையும் மறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம், எந்தவொரு குற்றவாளியும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க மாட்டோம். நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது கட்டாயமாகும். நீதி வெல்ல வேண்டும், இதை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு விசாரணை
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காணாமற்போனமை சம்பந்தமாக பிள்ளையான் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணை வளையத்திற்குள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
