நடுவானில் விமானிக்கு நேர்ந்த அனர்த்தம்
நடுவானில் விமானியை சிலந்தி கடித்ததால் ஜேர்மன்-ஸ்பெயின் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜேர்மனியின் டசல்டார்ப் நகரத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் மட்ரிட் நகருக்கு ஐபீரியா ஏர்பஸ் ஏ320 விமானம் பறப்பை மேற்கொண்டிருந்தபோது நடுவானில் விமானியை சிலந்தி ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது.
விமானிக்கு கடுமையான அலர்ஜி
இதனால் விமானிக்கு கடுமையான அலர்ஜி ஏற்பட்டதை அடுத்து விமான பணிப்பெண்கள், முதலுதவிப் பெட்டியில் இருந்த மருந்துகளைக் வைத்து விமானிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையில், விமானம் திட்டமிட்டபடி மட்ரிட் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட பின்னர், விமானம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
திட்டமிட்டபடி தரையிறங்கிய விமானம்
அலர்ஜியால் பாதிக்கப்பட்ட விமானியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்றப்பட்ட பொதி வழியாக சிலந்தி பூச்சி விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக ஐபீரியா ஏர்பஸ் ஏ320 விமானம் மட்ரிட் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்