துவாரகா மீதான மரபணு பரிசோதனை சாத்தியமா...! இலங்கையின் முன்னாள் எம்பி கூறும் உண்மைகள்
தலைவர் பிரபாகரனின் புதல்வி துவாரகா என புலம்பெயர் தேசமொன்றில் தோன்றியுள்ள பெண்ணை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தினால் உண்மைகளை வெளிக்கொண்டுவரமுடியுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என புலம்பெயர்தேசத்தில் உலாவிவரும் பெண் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 10 வருடத்திற்கு முன் துவாரகா என்னிடம் கதைத்தார்.
அண்ணா, இன்னும் எதுவும் முடியவில்லை. என்னுடைய தொலைபேசியும் உங்களுடைய தொலைபேசியும் ஒட்டுக்கேட்க முடியும். நீங்கள் லண்டன் வந்தால் நேரில் உங்களை சந்திக்கிறேன் என கூறினார்.
இதையடுத்து, அவரின் பெரியம்மாவான அருணா, தொலைபேசியின் ஊடாகவும் என்னிடம் கதைத்தார். துவாரகவாக இருந்தால், கண்டிப்பாக அவர் தனது தந்தை வழி உறவினர்களிடம் இருந்து DNA மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.