வங்கி அட்டை மூலம் பேருந்து கட்டண அறவீடு: அரசாங்கத்தின் புதிய தீர்மானம்!
Sri Lanka
Bimal Rathnayake
Srilanka Bus
By Kanooshiya
வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்துவதை அனுமதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பயணச்சீட்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில் இவ்வாறு கட்டணம் செலுத்தும் முறை அனுமதிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
பயணச்சீட்டு கட்டாயம்
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், அண்மையில் பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
இதனையடுத்து, இவ்வாறு வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பயணிகள் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் வசதி அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்