ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் மோசடி!
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்போது, ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் ஒப்பந்தத்தை ஒரே நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம் பெரிய அளவில் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எடுக்கப்பட்டுள்ள முடிவு
ஒரு ஓட்டுநர் உரிமத்தை அச்சிடுவதற்கு குறித்த தனியார் நிறுவனம் ரூ. 534.54 செலவாகும் என தெரிவித்துள்ளதாகவும், எனினும் அதனை மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தின்(RMV) மூலம் ரூ. 367 இற்கு அச்சிட முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, RMV மூலம் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது, அதற்காக அச்சிடும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறப்பிட்டுள்ளார்.

ஐ.நாவிலிருந்து அரசுக்கு சவால் விடுத்த அர்ச்சுனா எம்.பி: இராணுவத்திற்கு எதிராக சர்வதேசத்தில் முறைப்பாடு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
