தனியார் முதலீடுகளுக்கு வழங்கப்படவுள்ள அரச பங்களாக்கள் : வெளியான அறிவிப்பு
கொழும்பில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான 7 பங்களாக்களைப் பயனுள்ள பொருளாதார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு யோசனைகளைக் கோரியுள்ளது.
அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச பங்களாக்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைய, 24 பங்களாக்களை பொது-தனியார் பங்களிப்பு அடிப்படையில் 30 வருட காலத்திற்கு குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிரேரணைகளை சமர்ப்பிக்க வேண்டும்
அதனடிப்படையில் முதற்கட்டமாக 7 பங்களாக்கள் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய பங்களாக்களே இவ்வாறு உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்படவுள்ளன.
இந்த நிலையில் இதற்கான பிரேரணைகளை சமர்ப்பிக்க ஓகஸ்ட் 25ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |